அஜித் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த வலிமை திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. தமிழகத்தில் 650 தியேட்டர்களில் இப்படம் வெளியானது.

இப்படத்தில் போதை மருந்து கடத்தல் உள்ளிட்ட பல குற்றச்செயல்களை செய்யும் பைக் கும்பலை பிடிக்கும் போலீஸ் அதிகாரியாக அஜித் நடித்துள்ளார். இப்படத்தில் பைக் சேஸிங் காட்சிகள் ஹாலிவுட் ஸ்டைலில் எடுக்கப்பட்டுள்ளது பெரிய பிளஸ்ஸாக அமைந்துள்ளது.

இந்நிலையில், இப்படம் தமிழகத்தில் மட்டும் நேற்று ஒரு நாளில் ரூ.36.17 கோடி வசூலித்துள்ளதாகவும், உலகம் முழுவதும் சேர்த்து 64 கோடி வசூல் செய்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த தகவலை அஜித் ரசிகர்கள் உற்சாகத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.

valimai