அஜித் நடித்துள்ள திரைப்படம் வலிமை. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படம் அஜித் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் பிப்ரவரி 24ம் தேதி வெளியாகவுள்ளது.
இப்படத்தில் அதிரடியான சண்டை காட்சிகளும், பைக் சேஸிங் காட்சிகளும் இடம் பெற்றுள்ளது. இது டிரெய்லர் வீடியோவை பார்க்கும் போது இந்த காட்சிகள் மயிர் கூச்சரியும் படி இருந்தது. மேலும், பல புரமோஷன் வீடியோக்களை அவர் டிவிட்டரில் பகிர்ந்து அஜித் ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.
படம் வெளியாகி இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், இப்படத்தின் புரமோஷன் பணிகளை போனிகபூர் துவங்கியுள்ளார். இதன் தொடர்ச்சியாக பெங்களூரில் இன்று மாலை 7 மணிக்கு இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில், இயக்குனர் ஹெச்.வினோத், தயாரிப்பாளர் போனிகபூர் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொள்ளவுள்ளனர்.
கடந்த பல வருடங்களாகவே அஜித் தனது படங்கள் தொடர்பான எந்த விழாக்களிலும் கலந்து கொள்வதில்லை. எனவே, இந்த விழாவில் கலந்து கொள்வாரா என்பது தெரியவில்லை.