அஜித் நடித்துள்ள திரைப்படம் வலிமை. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இப்படம் அஜித் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார். இப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் புரமோஷன் பணிகள் பெரிதாக துவங்கப்படவில்லை. இப்படத்தின் விசில் தீம் வீடியோ வெளியிடப்பட்டது. மேலும் 2 பாடல்கள் ஏற்கனவே வெளியானது. அதோடு, இப்படத்தின் மேக்கிங் வீடியோவும் வெளியாகி அஜித் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் டிரெய்லர் வீடியோ நேற்று மாலை 6.30 மணிக்கு வெளியிடப்பட்டது. இந்த டிரெய்லர் வீடியோவில் அஜித் ரசிகர்கள் விரும்பும் படியான பல ஆக்ஷன் மற்றும் பைக் சேஸிங் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.
இந்நிலையில், வலிமை டிரெய்லர் வீடியோ யுடியூப்பில் ஹிட் அடித்துள்ளது. தற்போது வரை 15 மில்லியன் (1.5 கோடி) பார்வைகளை பெற்றுள்ளது. இதை தல அஜித் ரசிகர்கள் உற்சாகத்துடன் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இப்படத்தின் தயாரிப்பாள் போனிகபூரும் டிவிட்டரில் இதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.