அஜித் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் வலிமை. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். போனிகபூர் தயாரித்துள்ளார். இப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் புரமோஷன் பணிகள் பெரிதாக துவங்கப்படவில்லை. படம் பற்றிய அப்டேட்டுகள் கூட முன்னறிவிப்பு ஏதுமின்றி வெளியிடப்பட்டு வருகிறது.

சமீபத்தில் இப்படத்தின் விசில் தீம் வீடியோ வெளியிடப்பட்டது. மேலும் 2 பாடல்கள் ஏற்கனவே வெளியானது. அதோடு, இப்படத்த்தின் மேக்கிங் வீடியோவும் வெளியாகி அஜித் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் நாளை வெளியாகவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஆனால், இதை வழக்கம் போல் போனிகபூர் உறுதி செய்யவில்லை. ஆனாலும், படம் வெளியாக இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில், நாளை வெளியானாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை.