அஜித்குமார் நடித்துள்ள திரைப்படம் வலிமை. இப்படத்தை சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர் கொண்ட பார்வை ஆகிய படங்களை இயக்கிய வினோத் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். போனிகபூர் தயாரித்துள்ளார்.
இப்படம் அஜித் ரசிகர்களிடையே அதிகமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் பொங்கல் விருந்தாக வெளியாகவுள்ளது. இப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு கடந்த 14ம் தேதி வெளியானது. இந்த மேக்கிங் வீடியோவில் பைக் ரேஸ் காட்சிகள் மற்றும் அஜித் வீலிங் செய்த போது கீழே விழுந்த காட்சிகள், அதன்பின் மீண்டும் வீலிங் செய்யும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது.
இந்நிலையில், இப்படத்தின் விசில் தீம் இசை தற்போது வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. 3.30 மணிக்கு வெளியாகவுள்ளது. ஏற்கனவே யுவன் -அஜித் இசையில் பில்லா, மங்காத்தா ஆகிய படங்களில் இடம் பெற்ற தீம் இசை அஜித் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. அந்த வகையில் வலிமை படத்தின் தீம் மியூசிக்கும் அஜித் ரசிகர்களை கவர்ந்துள்ளது.