அஜித் நடித்துள்ள திரைப்படம் வலிமை. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இப்படம் அஜித் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார். இப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் புரமோஷன் பணிகள் பெரிதாக துவங்கப்படவில்லை. படம் பற்றிய அப்டேட்டுகள் கூட முன்னறிவிப்பு ஏதுமின்றி வெளியிடப்பட்டு வருகிறது.
சமீபத்தில் இப்படத்தின் விசில் தீம் வீடியோ வெளியிடப்பட்டது. மேலும் 2 பாடல்கள் ஏற்கனவே வெளியானது. அதோடு, இப்படத்தின் மேக்கிங் வீடியோவும் வெளியாகி அஜித் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த டிரெய்லர் வீடியோவில் அஜித் ரசிகர்கள் விரும்பும் படியான பல ஆக்ஷன் மற்றும் பைக் சேஸிங் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.