vanitha

பாலிவுட்டில் ஹிட் ஆன அந்தாதூண் திரைப்படத்தின் தமிழ் உரிமையை வாங்கிய நடிகர் தியாகராஜன் அதை அவரின் மகனும், நடிகருமான பிரசாந்தை வைத்து உருவாக்க முடிவெடுத்தார். இப்படத்திற்கு ‘அந்தகன்’ என தலைப்பு வைக்கப்பட்டது. முதல் இப்படத்தை இயக்க பேசப்பட்டவர் மோகன் ராஜா. அதன் பின் திடீரென அவர் விலகினார். அவருக்கு பின் ஜோதிகா நடித்த ‘பொன்மகள் வந்தாள்’ பட இயக்குனர் ஜே.ஜே. பெட்ரிக் இயக்க முன் வந்தார். அதன் பின் அவரும் விலக தற்போது இப்படத்தை தானே இயக்குவது என முடிவெடுத்துள்ளார் தியாகராஜன்.

anthagan

இந்நிலையில், இப்படத்தில் முக்கிய வேடத்தில் வனிதா விஜயகுமார் நடிப்பது தெரியவந்துள்ளது. ஏற்கனவே, சிம்ரன் இப்படத்தில் நடிப்பது உறுதியானது. இப்படம் தொடர்பாக சில புகைப்படங்களை பிரசாந்த் தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.