varalakshmi

நடிகை சரத்குமார் ஏற்கனவே திருமணமாகி 2 மகள்கள் இருந்த நிலையில் நடிகை ராதிகாவை 2வதாக திருமணம் செய்து கொண்டார். சரத்குமார் – ராதிகா தம்பதிக்கு ஒரு மகனும் பிறந்தான். தற்போது அவருக்கு 18 வயது ஆகிறது.

சரத்குமாரின் முதல் மனைவியின் மூத்த மகள்தான் நடிகை வரலட்சுமி. இவர் போடா போடி படத்தில் அறிமுகமானவர். அதன்பின் தாரை தப்பட்டை, சண்டக்கோழி 2, சர்கார் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆனால், தனது அப்பா சரத்குமார் 2வது திருமணம் செய்து கொண்டாலும், அனைவருடனும் வரலட்சுமி இணக்கமாக நடந்து வருகிறார். அனைவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் அவ்வப்போது வெளியாவதுண்டு.

sarathkumar

இந்நிலையில், ராதிகாவை அம்மா என அழைப்பீர்களா? என அவரிடம் கேட்டபோது ‘அவரை நான் ஏன் அம்மா என அழைக்க வேண்டும். அவர் எனக்கு அம்மா இல்லை. என் அப்பாவின் 2வது மனைவி மட்டுமே’ என பதிலளித்துள்ளார்.