பீஸ்ட் படத்திற்கு பின் நடிகர் விஜய் தற்போது தெலுங்கு-தமிழ் மொழிகளில் உருவாகும் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இது விஜயின் 66வது திரைப்படமாகும். இப்படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கி வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார்.
இப்படம் தந்தை மகன் செண்டிமெண்ட் பற்றிய கதை என சமீபத்தில் தெரிய வந்தது. எனவே, ஆந்திர சினிமா பாணியில் கொஞ்சம் மசலா, செண்டிமெண்ட் கலந்து இப்படம் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இப்படத்திற்கு வாரிசு என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. நாளை விஜயின் பிறந்தநாள் என்பதால் இப்படத்தின் முதல் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில், விஜய் கோட்ஷூட் அணிந்து செம ஸ்டைலாக இருக்கிறார். இந்த போஸ்டர் விஜய் ரசிகர்களுக்கு சிறந்த பிறந்தநாள் போஸ்டராக அமைந்துள்ளது.