கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள திரைப்படம் வெந்து தணிந்தது காடு. மாநாடு ஹிட்டுக்கு பின் சிம்புவின் அடுத்த படமாக இப்படம் வெளியாகவுள்ளது.
இப்படத்திற்காக சிம்பு உடல் இளைத்து சிறு வயது பையன் போல் மாறியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது. இப்படத்தின் 3ம் கட்டப்படப்பிடிப்பு தற்போது சென்னையில் துவங்கியுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் சில காட்சிகள் அடங்கிய கிளிம்பிஸ் வீடியோவை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. இந்த டீசர் வீடியோ சிம்பு ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த டீசர் வீடியோவில் அதிரடி சண்டி காட்சிகள் இடம் பெற்றுள்ளது.