simbu

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் மாநாடு. இப்படத்தின் டீசர் வீடியோ சமீபத்தில் வெளியானது. இந்த டீசரை பார்த்த நெட்டிசன்கள் இப்படம் கிறிஸ்டோபர் நோலனின் ‘டெனண்ட்’ படம் போல் இருப்பதாக தெரிவித்தனர்.

இந்நிலையில், இதுபற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் விளக்கமளித்த வெங்கட்பிரபு ‘மாநாடு படத்தை ‘டெனண்ட்’ படத்தோடு ஒப்பிடுவது பெருமைதான். ஆனால், அதில் உண்மையில்லை. உண்மையை சொல்ல வேண்டுமெனில் டெனண்ட் படம் எனக்கு புரியவே இல்லை. மாநாடு படத்தின் டிரெய்லர் வீடியோ வரும் வரை பொறுத்திருங்க. அதன்பின் மாநாடு படத்தை மற்ற படங்களோடு ஒப்பிடுங்கள்’ என பதிவிட்டுள்ளார்.