சென்னை 28 திரைப்படம் மூலம் இயக்குனரானவர் வெங்கட் பிரபு. மங்காத்தா படம் மூலம் உச்சம் தொட்டார்.
அடுத்தடுத்து அவர் இயக்கிய படங்கள் சறுக்கிய நிலையில் சிம்புவை வைத்து அவர் இயக்கிய மாநாடு திரைப்படம் மூலம் மீண்டும் வெற்றிப்பட இயக்குனராக மாறியுள்ளார்.மேலும், மாநாடு படத்துக்கு பின் வெளியான ‘மன்மதலீலை’ படமும் நல்ல வரவேற்பை பெற்றது.
அடுத்து சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைத்தன்யாவை வைத்து ஒரு புதிய தெலுங்கு படத்தை வெங்கட்பிரபு இயக்கவுள்ளார்.
இந்த படம் முடிந்த பின் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு புதிய படத்தை வெங்கட்பிரபு இயக்கவுள்ளார். இரண்டு பேருமே ரொம்ப ஜாலியான ஆட்கள். எனவே, அந்த படம் ரசிகர்களை மகிழ்விக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.