வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் வலிமை. இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால், எதிர்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்யவில்லை என பரவலாக விமர்சனம் எழுந்தது. அஜித் ரசிகர்களை தவிர மற்றவர்களை இப்படம் பெரிதாக ஈர்க்கவில்லை.
இந்நிலையில், சமீபத்தில் ஒரு பேட்டியில் வலிமை படம் பற்றி பேசிய மாநாடு பட இயக்குனர் வெங்கட்பிரபு ‘அஜித் சார் படம் என்பதால் மிகவும் எதிர்பாத்தேன்.
அதுவும் வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கிறார் என்றவுடனே எதிர்ப்பார்ப்பு எங்கேயோ இருந்தது. ஆனால், படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை . மிகவும் எதிர்பார்த்தேன். ஒரு வேளை அதிகமாக எதிர்பார்த்ததால் அப்படி தோன்றியதா என தெரியவில்லை’ எனக் கூறியுள்ளார்.