கடந்த சில வருடங்களாக நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் ஒருவரை ஒருவர் காதலித்து வருகின்றனர். ஆனால், இப்போது வரை அவர்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால், தங்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துவிட்டதாக கூறி அது தொடர்பான மோதிரத்தையும் ஒரு நேர்காணலில் நயன்தாரா காட்டினார்.
மேலும், திருமணம் செய்து கொண்டாலும் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளவே நயன்தாரா விரும்புவதாக கூட செய்திகள் கசிந்தது. ஒருபக்கம், நயன்தாரா தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் கூட காத்துவாக்குல ரெண்டு காதல் படம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
சமீபகாலமாக நயனும், விக்கியும் தொடர்ந்து கோவில் கோவிலாக சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். சமீபத்தில் கூட இருவரும் திருப்பதி சென்று தரிசனம் செய்தனர். இது தொடர்பான புகைப்படங்களும் வெளியானது.
இந்நிலையில், இவர்களின் திருமணம் அடுத்த மாதம், அதாவது ஜூன் மாதம் 9ம் தேதி திருப்பதியில் நடைபெறவுள்ளதாக தற்போது செய்திகள் கசிந்துள்ளது. அதற்கான ஏற்பாடுகளை செய்யத்தான் சமீபத்தில் இருவரும் திருப்பதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. விரைவில் இந்த தகவலை விக்னேஷ் சிவன் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.