நானும் ரவுடிதான் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கிய போது அப்படத்தில் நடித்த நயன்தாராவுக்கும் அவருக்கும் இடையே காதல் உருவானது. அதன் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே ஏறக்குறைய லிவ்விங் டூ கெதர் வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று பொழுதை கழித்து வருகின்றனர்.

மேலும், இருவரும் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் படங்களை தயாரிப்பது, படங்களை வாங்கி வெளியிடுவது என பிஸியாக இருக்கின்றனர். ஒருபக்கம் விக்னேஷ் சிவன் இயக்கி வரும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்திலும் நயன்தாரா நடித்து வருகிறார்.

nayan

சமீபத்தில் வெளியான ராக்கி படத்தை ரவுடி பிக்சர்ஸ் நிறுவனமே வெளியிட்டது. மேலும், இப்படத்தை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் இணைந்து தியேட்டரில் பார்த்த புகைப்படமும் வெளியாகி வைரலாகியது.

இந்நிலையில், புது வருடத்தை கொண்டாட இருவரும் துபாய் சென்றுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களை விக்னேஷ் சிவன் விரைவில் சமூக வலைத்தளங்களில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.