vignesh

கடந்த சில வருடங்களாக நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் ஒருவரை ஒருவர் காதலித்து வருகின்றனர். ஆனால், இப்போது வரை அவர்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை. நயன்தாராவும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் கூட காத்துவாக்குல ரெண்டு காதல் படம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

nayanthara

ஒருபக்கம், நயனும், விக்கியும் தொடர்ந்து கோவில் கோவிலாக சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். சமீபத்தில் கூட இருவரும் திருப்பதி சென்று தரிசனம் செய்தனர். மேலும், இவர்களின் திருமணம் அடுத்த மாதம், அதாவது ஜூன் மாதம் 9ம் தேதி திருப்பதியில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு கடல் உணவு உணவகத்தில் நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவன் உணவு ஊட்டி விடும் வீடியோவை விக்னேஷ் சிவனே தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Vignesh Shivan (@wikkiofficial)