தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. அதேபோல், தமிழ், தெலுங்கு சினிமாவில் நடித்து வருபவர் நடிகை சமந்தா.
தற்போது இருவரும் இணைந்து காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வருகின்றனர். விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தை நயனின் காதலர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். இப்படம் வருகிற 28ம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில், இப்படத்தை நயனும், சமந்தாவும் இணைந்து பார்த்தனர். படம் முடிந்த பின் பீலின்ஸ் ஆன நயன்தாரா சமந்தாவை நீண்ட நேரம் கட்டிப்பிடித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த வீடியோவை சமந்தா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். மேலும், விக்னேஷ் சிவனும் டிவிட்டரில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.
Thank you for your kind words mam @Samanthaprabhu2 😇
Its been a great pleasure working with you and we just can't wait to witness people's applause for Khatija ❤️#KaathuvaakulaRenduKaadhal releasing Worldwide on April 28. @VigneshShivN #DippamDappam #KRKfromApril28 pic.twitter.com/GST25V4Mqw
— Rowdy Pictures (@Rowdy_Pictures) April 18, 2022