vignesh

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல். ரொமாண்டிக் காமெடி வகையில் இப்படம் உருவாக்கப்பட்டிருந்தது. நானும் ரவுடிதான் படத்திற்கு பின் இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.

ஒருவர் 2 பெண்களை காதலிக்கும் போது ஏற்படும் பிரச்சனையை நகைச்சுவையாக இப்படம் சொல்லியிருக்கிறது என்பது படத்தின் டீசரை பார்த்த போதே ரசிகர்களுக்கு புரிந்துவிட்டது. எனவே, ரசிகர்களிடையே இப்படத்திற்கு நல்ல எதிர்ப்பார்ப்புகள் இருந்தது. எனவே, விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா ஆகியோரின் ரசிகர்கள் இப்படத்தை ஆர்வமுடன் பார்த்தனர்.

kvrk

ஒருபக்கம் இப்படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்களையும் சமூகவலைத்தளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.படத்தின் முதல் பாதி சிறப்பாக இருக்கிறது. படத்தின் 2ம் பாதி பொறுமையை சோதிக்கிறது. 2ம் பாதியில் சுவாரஸ்யமான திரைக்கதை இல்லை எனவும் பலரும் தெரிவித்தனர்.

இந்நிலையில், படம் நன்றாக இருப்பதாக தியேட்டர் வசூலில் சிலர் கூறிய வீடியோவை டிவிட்டரில் பகிர்ந்துள்ள விக்னேஷ் சிவன் ‘படத்தின் மிகப்பெரிய வரவேற்புக்கு நன்றி…நீண்ட பல போராட்டங்களுக்குப் பிறகு இப்படத்தை திரையரங்குகளில் கொண்டு வந்ததற்கான பலனை ரசிகர்களின் புன்னகையில் கண்டு மகிழ்கிறேன்..’ என பதிவிட்டுள்ளார்.