atlee

நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் ஒருவரை ஒருவர் காதலித்து வருவது எல்லோருக்கும் தெரியும். இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. ஆனால், தற்போது அதில் ஒரு சிக்கலை அட்லீ ஏற்படுத்தியுள்ளார்.

அதாவது, அட்லீ இயக்கிய ராஜா ராணி படத்தில் நடித்தவர் நயன்தாரா . அட்லீக்கு ஏறக்குறைய அக்கா போலவே நயன் மாறிவிட்டார். அட்லீ தற்போது ஷாருக்கானை வைத்து இயக்கி வரும் ஹிந்தி படத்திலும் நயன்தாராதான் கதாநாயகி.

atlee

கோலிவுட்டை போல பாலிவுட்டிலும் நயனை எப்படியாவது பெரிய நடிகை ஆக்க வேண்டும் என ஆசைப்பட்ட அட்லீ, பாலிவுட்டில் வாய்ப்புகளை வாங்கி கொடுக்கும் ஏஜென்சிகளை அவருக்கு அறிமுகம் செய்து வாய்ப்புகளை பெற்று கொடுத்துள்ளார். இதுவரை 12 படங்களில் நடிக்கும் வாய்ப்பு வாங்கி கொடுத்துள்ளார்களாம். இது தொடர்பான இவரிடம் பேசுங்கள் என விக்னேஷ் சிவனிடம் அவரின் எண்ணை கொடுத்துள்ளாராம் நயன்.

பாலிவுட் படமென்றால் முடிய மிகவும் தாமதமாகும். நயன் பாலிவுட்டில் பிஸி ஆகிவிட்டால் எப்போது திருமணம் செய்து கொள்வது என அப்செட் ஆகியுள்ளாராம் விக்னேஷ் சிவன். எனவே, பாலிவுட் தொடர்பான செல்போன் அழைப்புகள் வந்தால் எதாவது காரணத்தை சொல்லி தட்டி கழித்து வருகிறாராம்.

விக்னேஷ் சிவனை இப்படி மாட்டி விட்டாரே அட்லீ..