தமிழ் சினிமாவில் எப்போதும் இரு நடிகர்களிடையே போட்டி இருக்கும். எம்.ஜி.ஆர் – சிவாஜி, ரஜினி – கமல், விஜய் – அஜித், தனுஷ் -சிம்பு என திரையுலகில் எப்போதுமே போட்டி உண்டு. சமூகவலைத்தளங்களில் கூட இருவரின் ரசிகர்களும் எப்போதும் மோதிக்கொள்வார்கள். அதேநேரம், நடிகர்கள் போட்டியை வெளியே காட்டிக்கொள்ளாமல் சிரித்தபடி போஸ் கொடுப்பார்கள்.
இந்நிலையில், விஜய் எப்போதும் அஜித்தை போட்டியாகத்தான் பார்த்தார் என்பது ஒரு பத்திரிக்கையாளர் மூலம் தெரியவந்துள்ளது.
அதாவது ஒரு பிரபல பத்திரிக்கையில் எம்ஜிஆர் – சிவாஜி, ரஜினி – கமல், அஜித் – விஜய் என எழுதி வந்தனர். அந்த அலுவலகத்தின் தொலைப்பேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு ‘உங்கள் புத்தகத்தை தொடர்ந்து படித்து வருகிறேன். எப்போதும் அஜித்- விஜய் என பதிவிட்டு வருகிறீர்கள். இனிமேல் விஜய் – அஜித் என எழுதுங்கள்’ என விஜய் கோரிக்கை வைத்தாராம்.
மனதுக்குள் அஜித்தை போட்டியாக நினைக்காமலா விஜய் இப்படி சொல்லி இருப்பார் என அந்த பத்திரிக்கையாளர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.