விஜய் நடிக்கும் படங்கள் என்றாலே அப்படத்தின் இசை வெளியீட்டு விழா மிகவும் சிறப்பாக நடத்தப்படும். அந்த விழாவில் விஜய் பேசும் குட்டிக்கதையோ அல்லது மறைமுக அரசியலோ பரபரப்பாக பேசப்படும். அதுவே, அப்படத்திற்கு சிறந்த புரமோஷனாகவும் அமையும். அதேநேரம், விஜய் ரசிகர்கள் பலரும் எப்படியாவது விஜயை நேரில் பார்த்துவிட வேண்டுமென விழா நடக்கும் இடத்தில் குவிவார்கள்.

vijay

எல்லோரும் உள்ளே செல்ல முடியாது என்பதால் வெளியே பலருக்கும் ஒரு திரை கட்டப்பட்டு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படும். அதில் கூட்ட நெரிசல் ஆகி போலீசார் தடியடி நடத்தும் சம்பவங்களும் இதற்கு முன்பு நடந்துள்ளது. இதையெல்லாம் கணக்குப்போட்ட விஜய் பீஸ்ட் படத்திற்கு இசை வெளியீட்டு விழாவே வேண்டாம் எனக் கூறிவிட்டாராம். கொரோனா பரவல் முழுதாக முடியாத நிலையில், கூட்டம் கூடுவது தனக்கு கெட்டப்பெயரை கொண்டு வரும் எனவும் அவர் கருதுவதாக தெரிகிறது.

அதேநேரம், துபாயில் டிரெய்லர் வெளியீட்டு விழாவை நடத்தலாம் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஆலோசித்து வருகிறதாம். ஆனால், அதற்கும் விஜய் வரமாட்டேன் எனக்கூறிவிட என்ன செய்வது என யோசித்து வருகிறதாம் சன் பிக்சர்ஸ்.