nelson

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்க விஜய், பூஜா ஹெக்டே, யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்து கடந்த 13ம் தேதி வெளியான திரைப்படம் பீஸ்ட். இப்படத்திற்கு அதிகமான எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என விமர்சனங்கள் எழுந்தது.

நெல்சனின் ஸ்டைலே இப்படத்தில் இல்லை எனவும், காமெடி எதுவும் வொர்க் ஆக வில்லை எனவும், கதை, திரைக்கதையில் சுவாரஸ்யம் இல்லை எனவும் பொதுவான ரசிகர்கள் தெரிவித்தனர். பீஸ்ட் வேஸ்ட் என்கிற ரீதியில் சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்தனர். இப்படத்தை கிண்டலடித்து மீம்ஸ்களும் தாறுமாறாக வெளியானது.

beast

இதைத்தொடர்ந்து அடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பே நெல்சனுக்கு இழுபறியாக இருக்கிறது என செய்திகள் வெளியானது. ஆனால், நெல்சன் இதுபற்றி எதையும் தெரிவிக்கவில்லை. ஒருபக்கம் பீஸ்ட் திரைப்படம் நல்ல வசூலை பெற்றதாக செய்திகள் வெளியானது.

beast

இந்நிலையில், பீஸ்ட் படக்குழுவினருக்கு விஜய் ஒரு விருந்து அளித்துள்ளார். அவரது வீட்டில் இந்த விருந்து நடந்ததாக கருதப்படுகிறது. இதில், நெல்சன், பூஜா ஹெஜ்டே, அனிருத் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படத்தை நெல்சன் தனது டிவிட்டரில் பகிர்ந்து விஜய்க்கு நன்றி கூறியுள்ளார்.

இதன் மூலம் பீஸ்ட் படத்திற்கு எதிரான செய்திகளை விஜய் அடித்து நொறுக்கி படம் வெற்றி என்பதை மறைமுகமாக கூறியுள்ளார் என அவரின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

nelson