நடிகர் விஜய் இன்னும் நேரடி அரசியலுக்கு வரவில்லை என்றாலும் அவரை சுற்றி அரசியல் இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஏற்கனவே விஜய் மக்கள் இயக்கம் என்கிற பெயரில் அவரின் ரசிகர்கள் தேர்தல்களில் போட்டியிட்டு வருகின்றனர்.
நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் கூட விஜய் ரசிகர்கள் பலரும் சுயேச்சையாக போட்டியிட்டு அதில் 129 பேர் வெற்றி பெற்றனர். எனவே, எதிர்காலத்தில் விஜய் அரசியலுக்கு வருவார் என்கிற கணிப்பு பலருக்கும் இருக்கிறது.
ஒருபக்கம் விஜய் திரைப்படங்களில் நடித்து வருகிறார். அவர் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் படம் வருகிற 13ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், தற்போது அவர் அடுத்து நடிக்கவுள்ள படத்தின் பூஜையும் இன்று சென்னையில் நடந்தது. இது தொடர்பான புகைப்படங்கள் இன்று காலை முதல் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்நிலையில், திடீரென முதல்வர் ஸ்டாலினும், விஜயும் சந்தித்துக்கொண்ட நிகழ்வு நடந்துள்ளது. பிகில் பட தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம் குடும்ப திருமண விழாவில்தான் இந்த சந்திப்பு நடந்துள்ளது. ஒருவருக்கு ஒருவர் வணக்கம் செலுத்தி மரியாதை செலுத்திக்கொண்டனர்.
இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.