விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் வருகிற 13ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகிறது. 14ம் தேதி பாலிவுட்டில் ‘விஜய் தி மாஸ்டர்’ என்கிற தலைப்பில் வெளியாகிறது. அதுவும் சுமார் 500 தியேட்டர்களில் வெளியாகவுள்ளது. விஜய் நடித்த ஒரு திரைப்படம் இதுவரை நேரிடையாக ஹிந்தியில் வெளியானதில்லை.
ஆனால் தற்போது பாலிவுட், உத்திரபிரதேசம், டெல்லி, ராஜஸ்தான் மற்றும் கிழக்கு பஞ்சாப் என 500 தியேட்டர்கள் மாஸ்டர் ரிலீஸாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.