vijay

பீஸ்ட் படத்திற்கு பின் நடிகர் விஜய் ஒரு நேரடி தெலுங்கு படத்தில் நடிக்கவுள்ளார் என்பது எல்லோருக்கும் தெரிந்த செய்திதான். இப்படத்திற்கான படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் துவங்கவுள்ளது. இப்படத்தை தோழா படத்தை இயக்கிய தெலுங்கு பட இயக்குனர் வம்சி இயக்கவுள்ளார்.

இப்படத்தை தெலுங்கு பட தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கவுள்ளார். பல வருடங்களுக்கு பின் ஒரு மென்மையான காதல் கதையில் விஜய் நடிக்கவுள்ளாராம்.

இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் துவங்கவுள்ளது. எனவே, தமிழ், தெலுங்கு என 2 மொழிக்கும் ஏற்றவாறு கதாநாயகி மற்றும் மற்ற நடிகர்களை தேர்ந்தெடுக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.ராஷ்மிகா மந்தனா மற்றும் சில பாலிவுட் நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகி வருகிறது. இப்படத்தி யார் கதாநாயகியாக நடிக்க போகிறார்கள் என்கிற அறிவிப்பு காதலர் தினமான பிப்ரவரி 14ம் தேதி அறிவிக்கப்படவுள்ளது.

இப்படத்தில் நடிக்க விஜய்க்கு ரூ.113 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் இப்படம் வெளியாவதால் இந்த சம்பளம் பேசப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.