pushpa

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் புஷ்பா. இப்படத்தில் அல்லு அர்ஜூனோடு ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் என பலரும் நடித்திருந்தனர்.

இப்படம் தெலுங்கு மட்டுமின்றி தமிழ்,ஹிந்தி, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் டப் செய்யப்பட்டு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வசூலை வாரி குவித்தது. எனவே, இப்படத்தின் 2வது பாகம் தற்போது உருவாகி வருகிறது.

இந்நிலையில், இப்படத்தில் விஜய் சேதுபதி ஒரு போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது. படக்குழு அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் விரைவில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.