கே.ஜி.எஃப், கே.ஜி.எஃப் 2 ஆகிய படங்களை இயக்கியவர் பிரசாந்த் நீல். கே.ஜி.எஃப் திரைப்படம் தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி என 4 மொழிகளில் மெகா பட்ஜெட்டில் உருவாகி ரசிகர்களை கவர்ந்தது. தற்போது அதன் 2ம் பாகம் தயாராகி வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது.
இப்படத்திற்கு பின் பாகுபலி புகழ் பிரபாஸை வைத்து மெகா பட்ஜெட்டில் ஒரு புதிய படத்தை பிரசாந்த் நீல் இயக்கவுள்ளார். இப்படத்திற்கான பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இப்படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்க விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பெரிய இயக்குனர், பெரிய நடிகர் மற்றும் பெரிய படம் என்பதால் விஜய் சேதுபதி இப்படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.