தமிழில் பல திரைப்படங்களில் நடித்தவர் விஜய் சேதுபதி. தற்போது துக்ளக் தர்பார் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும், தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் என ரவுண்டு கட்டி அடித்து வருகிறார்.
இந்நிலையில், இந்தியில் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்த ‘அந்தாதூண்’திரைப்படத்தை இயக்கிய ஸ்ரீராம் ராகவன் இயக்கும் அடுத்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக கத்ரீனா கைப் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.