விஜய் சேதுபதி, சூரி ஆகியோரை வைத்து 2 வருடங்களாக வெற்றிமாறன் இயக்கி வரும் திரைப்படம் விடுதலை. எந்த நேரத்தில் இப்படத்திற்கு விஜய் சேதுபதியும், சூரியும் ஒத்துக்கொண்டார்களோ, இப்படம் இன்னும் முடிந்தபாடில்லை. விஜய் சேதுபதியாவது அவ்வப்போது இப்படத்தில் நடித்து வந்தார். மற்ற நேரங்களில் மற்ற படங்களில் நடித்தார். ஆனால், நடிகர் சூரி இப்படத்தில் நடிக்க துவங்கியது முதலே வேறு எந்த படத்திலும் கமிட் ஆகவில்லை.
சில நாட்களுக்கு முன்பு ஒருவழியாக படத்தை வெற்றிமாறன் முடித்துவிட, விஜய் சேதுபதியும், சூரியும் ‘ஆள விடு சாமி’ என்கிற ரேஞ்சிக்கு படப்பிடிலிருந்து தெறித்து ஓடியுள்ளனர்.
தற்போது படத்தை எடிட் செய்து பார்த்த வெற்றிமாறனுக்கு படத்தில் திருப்தி ஏற்படவில்லையாம். எனவே, விஜய் சேதுபதியை போனில் அழைத்து ‘படம் எனக்கு திருப்தி இல்லை. இன்னும் 25 நாள் கால்ஷீட் கொடுங்க.. படத்த முடித்துவிடலாம்’ எனக்கூற விஜய் சேதுபதி அலறிவிட்டாராம். ‘அண்ணே என்னை விட்ருணே’ என கெஞ்ச துவங்கிவிட்டாரம். அப்புறம் ஒருவழியாக ‘சரி..தருகிறேன்’ எனக் கூறிவிட்டாராம்.
ஆனால், சூரி நிலமைதான் ரொம்ப பாவம்…