sulthan

சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ படத்தை இயக்கியவர் பாக்கியராஜ் கண்ணன். இவர் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள திரைப்படம் சுல்தான். இப்படத்தில் தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக உள்ள ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இத்திரைப்படம் ஏப்ரல் 2ம் தேதி தியேட்டரில் வெளியாகவுள்ளது.

இப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை ரூ.8.25 கோடிக்கு விஜய் டிவி வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. கார்த்தி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்த ‘கைதி’ திரைப்படத்தின் தொலைக்காட்சி உரிமையையும் விஜய் டிவி வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.