தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்தவர் விஜயகாந்த். புரட்சிக்கலைஞர் என்கிற பட்டமும் அவருக்கு கிடைத்தது. பல வெற்றிப்படங்களை கொடுத்தவர். இவரால் லாபமடைந்த பல தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் அதிபர்கள் உண்டு.
அதன்பின் அவர் தேமுதிக என்கிற கட்சியும் துவங்கினார். ஆனால், உடல்நிலை காரணமாக அவர் தீவிர அரசியலிலிருந்தும், சினிமாவிலிருந்தும் ஒதுங்கி இருக்கிறார். அவரின் சமீபத்திய புகைப்படம் ஒன்று வெளியாகி எல்லோரையும் அதிர்ச்சியடைய வைத்தது.
ஒருபக்கம், அவர் விஜய் மல்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் ‘மழை பிடிக்காத மனிதன்’ திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் என்கிற செய்தி சில நாட்களுக்கு முன்பு வெளியானது. ஆனால், இதை பிரேமலதா விஜயகாந்த் மறுத்தார்.
இந்நிலையில், அப்படத்தில் ஒரே ஒரு காட்சியில் மட்டும் விஜயகாந்த் நடித்துள்ளார். அந்த காட்சியை விஜயகாந்தின் வீட்டிலேயே வைத்து படம்பிடித்துவிட்டனர் என தற்போது செய்திகள் வெளிவந்துள்ளது. எனவே, பல வருடங்களுக்கு பின் விஜயகாந்தை திரையில் பார்க்கும் வாய்ப்பு அவரின் ரசிகர்களுக்கு இப்படம் மூலம் கிடைத்துள்ளது.