web analytics
Monday, October 3SOCIAL MEDIA

இந்த ஆண்டில் அதிக வசூல்!… விக்ரம் படம் மூலம் கெத்து காட்டும் ஆண்டவர்…

vikram

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, சூர்யா, பஹத் பாசில் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் விக்ரம். இப்படம் கடந்த 3ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. 4 வருடங்களுக்கு பின் கமல்ஹாசன் படம் வெளியாவது அவரின் ரசிகர்களை சந்தோஷப்படுத்தியுள்ளது. இப்படம் ரசிகர்களை கவர்ந்து வெற்றிப்படமாக மாறியுள்ளது.

இப்படம் நல்ல வசூலை பெற்று வருகிறது. படம் வெளியாகி 10 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், உலக அளவில் இப்படம் ரூ.300 கோடி வசூலை நெருங்கியுள்ளது.

ஒருபக்கம், ரஜினி நடிப்பில் வெளியான 2.0 படத்திற்கு பின் வேகமாக ரூ.250 கோடி வசூலை ஈட்டிய படம் என்கிற பெருமையை விக்ரம் படம் பெற்றுள்ளது. இதுவரை தமிழகத்தில் மட்டும் இப்படம் ரூ.83 கோடி வசூலை தாண்டியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

மேலும், இந்த ஆண்டு அதிக வசூல் செய்த திரைப்படங்களின் பட்டியலில் விக்ரம் படம் இணைந்துள்ளது. ஏற்கனவே, கே.ஜிஎப்2, வலிமை ஆகிய படங்கள் அதிக வசூலை பெற்ற நிலையில் விக்ரம் திரைப்படம் அந்த வரிசையில் இணைந்துள்ளது. தமிழகத்தில் ஆர்.ஆர்.ஆர் படம் செய்த வசூலையும் தாண்டி விக்ரம் படம் வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

%d bloggers like this: