vikram

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, சூர்யா, பஹத் பாசில் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் விக்ரம். இப்படம் கடந்த 3ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. 4 வருடங்களுக்கு பின் கமல்ஹாசன் படம் வெளியாவது அவரின் ரசிகர்களை சந்தோஷப்படுத்தியுள்ளது. இப்படம் ரசிகர்களை கவர்ந்து வெற்றிப்படமாக மாறியுள்ளது.

இப்படம் நல்ல வசூலை பெற்று வருகிறது. படம் நேற்று வெளியான அன்றே தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.25 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை தமிழகத்தில் மட்டும் இப்படம் ரூ.70 கோடி வசூலை தாண்டியுள்ளது. உலக அளவில் இப்படம் ரூ.200 கோடி வசூலை தாண்டிவிட்டது.

இந்நிலையில், இப்படம் பாகுபலி 2 வசூலை தாண்டியுள்ளதாக சென்னை ரோஹினி தியேட்டர் அதிபரே தெரிவித்துள்ளார். இது பெரிய சாதனை என அவர் தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் பலரும் இப்படம் பற்றி சிலாகித்து பேசி வருவதால் தியேட்டர்களில் கூட்டம் அலைமோதி வருகிறது. லோகேஷ் கனகராஜுக்கும், கமல்ஹாசனுக்கும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.