web analytics
Friday, June 24SOCIAL MEDIA

3 வாரம் ஆகியும் ஹவுஸ்புல்!… ரூ.400 கோடி வசூலை நெருங்கும் விக்ரம்…

kamal

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, சூர்யா, பஹத் பாசில் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் விக்ரம். இப்படம் கடந்த 3ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இப்படம் ரசிகர்களை கவர்ந்து வெற்றிப்படமாக மாறியுள்ளது.

இப்படம் நல்ல வசூலை பெற்று வருகிறது. படம் வெளியாகி 17 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், உலக அளவில் இப்படம் ரூ.300 கோடி வசூலை தாண்டியுள்ளது. தமிழகத்தில் மட்டும் ரூ.150 கோடி வசூல் செய்துள்ளது.இதில் ஆச்சர்யம் என்னவெனில் படம் வெளியாகி 3 வாரங்கள் ஆகியும் தமிழகத்தின் பல திரையரங்குகளிலும் இப்படம் ஹவுஸ்புல்லாக ஓடி வருகிறது.

vikram

படத்தை வினியோகம் செய்த ரெட்ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்திற்கு மட்டும் இதுவரை பங்கு மட்டுமே ரூ.75 கோடி கிடைத்துள்ளதாக உதயநிதி ஸ்டாலினே தெரிவித்துள்ளார். விக்ரம் திரைப்படம் விரைவில் ரூ.400 கோடி வசூலை அடையும் என கணிக்கப்படுகிறது.

ஏற்கனவே, விக்ரம் திரைப்படம் ரஜினி நடிப்பில் வெளியான 2.0 படத்திற்கு பின் வேகமாக ரூ.250 கோடி வசூலை ஈட்டிய படம் என்கிற பெருமையை விக்ரம் படம் பெற்றது.

மேலும், இந்த ஆண்டு அதிக வசூல் செய்த திரைப்படங்களின் பட்டியலில் விக்ரம் படம் இணைந்துள்ளது. ஏற்கனவே, கே.ஜிஎப்2, வலிமை ஆகிய படங்கள் அதிக வசூலை பெற்ற நிலையில் விக்ரம் திரைப்படம் அந்த வரிசையில் எப்போதே இணைந்துவிட்டது..

தமிழகத்தில் ஆர்.ஆர்.ஆர் படம் செய்த வசூலையும் தாண்டி விக்ரம் படம் வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

%d bloggers like this: