web analytics
Thursday, December 1SOCIAL MEDIA

வசூலை வாரிக்குவிக்கும் விக்ரம்… எத்தனை கோடி வசூல் தெரியுமா?….

vikram

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, சூர்யா, பஹத் பாசில் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் விக்ரம். இப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. 4 வருடங்களுக்கு பின் கமல்ஹாசன் படம் வெளியாவது அவரின் ரசிகர்களை சந்தோஷப்படுத்தியுள்ளது. இப்படம் ரசிகர்களை கவர்ந்து வெற்றிப்படமாக மாறியுள்ளது.

இந்நிலையில், இப்படம் நல்ல வசூலை பெற்று வருகிறது. படம் நேற்று வெளியான நிலையில் நேற்று ஒரே நாளில் ரூ.25 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், உலகளவில் இப்படம் ரூ.55 கோடியை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

vikram

இப்படத்தை கமல்ஹாசன் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே, விஸ்வரூபம் படத்திற்கு பின் விக்ரம் திரைப்படம் கமலுக்கு வெற்றிப்படமாக அமைந்துள்ளது.

மேலும், இதுவரை வெளிவந்த கமல் திரைப்படங்களில் முதல் நாள் அதிக வசூல் செய்த திரைப்படம் என்கிற சாதனையை விக்ரம் படம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

%d bloggers like this: