vijay

தமிழ் சினிமாவை பொறுத்தவரை ரஜினிக்கு இணையாக விஜயின் படங்கள் தொடர்பான செய்திகள் பேசப்படும். பீஸ்ட் படத்துக்கு பின் தெலுங்கு பட இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இது விஜயின் 66வது திரைப்படமாகும். எனவே, தளபதி 66 என இப்படம் தொடர்பான செய்திகள் சமூகவலைத்தளங்களில் பேசப்பட்டு வந்தது.

vijay

ஆனால், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்து வெளியான விக்ரம் திரைப்படம் மெஹா ஹிட் அடித்து தளபதி 66 படம் தொடர்பான அப்டேட்டுகளை மழுங்கடிக்க செய்துவிட்டது. சமூக வலைத்தளங்களில் பலரும் விக்ரம் படம் பற்றியே பேசி வருகின்றனர். மேலும், விஜயின் 67வது படத்தை அதாவது தளபதி 67 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதால், அப்படத்தின் மீது எதிர்பாப்பு எகிறி விஜய் ரசிகர்கள் அதுபற்றி பேசி வருகின்றனர்.

எனவே, இதை சரிகட்ட விஜயின் பிறந்த நாளான வருகிற 22ம் தேதி தளபதி 66 படம் தொடர்பான முக்கிய அப்டேட்டை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. அனேகமாக தளபதி 66 ஃபர்ஸ்ட்லுக் போஸ்டராக இருக்கலாம் என நம்பப்படுகிறது.