vikram

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, சூர்யா, பஹத் பாசில் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் விக்ரம். இப்படம் கடந்த 3ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. 4 வருடங்களுக்கு பின் கமல்ஹாசன் படம் வெளியாவது அவரின் ரசிகர்களை சந்தோஷப்படுத்தியுள்ளது. இப்படம் ரசிகர்களை கவர்ந்து வெற்றிப்படமாக மாறியுள்ளது.

vikram

இப்படம் நல்ல வசூலை பெற்று வருகிறது. படம் வெளியான அன்றே தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.25 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. படம் வெளியாகி ஒரு வாரம் ஆகிவிட்ட நிலையில், உலக அளவில் இப்படம் ரூ.250 வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

ரஜினி நடிப்பில் வெளியான 2.0 படத்திற்கு பின் வேகமாக ரூ.250 கோடி வசூலை ஈட்டிய படம் என்கிற பெருமையை விக்ரம் படம் பெற்றுள்ளது. இதுவரை தமிழகத்தில் மட்டும் இப்படம் ரூ.83 கோடி வசூலை தாண்டியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. பல வருடங்களுக்கு சினிமாவில் இருக்கும் கமல் முதல் முறையாக ரஜினியின் சாதனையை தொட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.