kamal

ரஜினி,கமல் இருவரும் நல்ல நண்பர்கள் என்றாலும் சினிமா என வந்தால் இருவருக்கும் எப்போதும் போட்டிதான். இது பல வருடமாக தொடர்ந்து வருகிறது.

4 வருடங்களுக்கு பின் கமல்ஹாசன் நடிப்பில் விக்ரம் திரைப்படம் வெளியாகவுள்ளது. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதி, பஹத்பாசில் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரெய்லர் வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இந்த வீடியோவை இதுவரை 17 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். ஒரு மில்லியன் பேர் இந்த வீடியோவை லைக் செய்துள்ளனர். ரஜினியின் தர்பார் பட டிரெய்லர் வீடியோ ரூ.7 லட்சம் லைக்குகளை பெற்றது. மெநெலும்,20 மில்லியன் பேர் பார்த்துள்ளனர்.ரஜினியின் தர்பார் பட டிரெய்லர் சாதனையை கமலின் விக்ரம் பட டிரெய்லர் விரைவில் முறியடிக்கும் என கணிக்கப்படுகிறது.