பல வருடங்களாக காதலித்து வந்த விக்னேஷ் சிவன் – நயன்தாரா ஜோடி சமீபத்தில் திருமணமும் செய்து கொண்டனர். அவர்களின் திருமணம் சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஒரு கடற்கரை விடுதியில் கோலகலமாக கொண்டாடப்பட்டது.

vignesh

இந்த விழாவில் ரஜினி உட்பட திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் ஏற்கனவே சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியது. திருமணத்திற்கு பின் நயனும், விக்கியும் பல ஊர்களில் உள்ள கோவில்களுக்கு சென்று வந்தனர்.

vignesh

இந்நிலையில், சமீபத்தில் இருவரும் தங்களின் ஹனிமூனை கொண்டாட தாய்லாந்து சென்றனர்.

vignesh

தற்போது ஒரு விடுதியில் ஹனிமூன் கொண்டாடும் புகைப்படங்களை விக்கி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ‘தாய்லாந்தில் தாரத்துடன்’ என பதிவிட்டுள்ளார்.

vignesh