அஜித் நடித்துள்ள திரைப்படம் வலிமை. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், பல மாநிலங்களிலும் கொரோனா கட்டுப்பாடுகள் அமூலுக்கு வந்ததால் அதன் வெளியீடு தள்ளிப்போயுள்ளது. ஒருபக்கம் அஜித்தின் அடுத்த படம் தொடர்பான செய்திகள் கசிய துவங்கியுள்ளது. அஜித்தின் அடுத்த படத்திலும் வலிமை படத்தின் அதே டீம் அப்படியே இணைகிறது. அதாவது, போனிகபூர் தயாரிக்க ஹெச்.வினோத் இயக்கும் இந்த படம் குறுகிய கால படமாக உருவாகவுள்ளது.இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கியுள்ளது.

இந்நிலையில், இப்படம் பற்றி கருத்து தெரிவித்த வினோத் ‘இப்படத்தில் குறைவான சண்டை காட்சிகள், நிறைய வசனங்கள் இருக்கும். உலக அளவில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் ஒரு முக்கிய சமூக பிரச்சனையை இப்படம் பேசும்’ என தெரிவித்துள்ளார்.

இப்படத்திற்காக பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கும் பணி ஹைதராபாத்தில் இன்று துவங்கியுள்ளது. விரைவில் இப்படத்தின் முதல் கட்டப்பணிகள் துவங்கவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.