ajith

வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள திரைப்படம் வலிமை. இப்படத்தில் ஏராளமான பைக் சேஸிங் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. அஜித் ஏற்கனவே பைக் ரேஸர். பலமுறை கீழே விழுந்து முதுகில் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர். ஆனாலும், தொடர்ந்து இது போன்ற காட்சிகளில் அவர் நடித்து வருகிறார்.

valimai

இப்படம் பற்றி சமீபத்தில் பேட்டியளித்த வினோத் ‘ஒரு காட்சியில் அஜித் பைக் வீலிங் செய்த போது கீழே விழுந்துவிட்டார். உடம்பெல்லாம் காயம். எனவே, அவருக்கு 2 நாட்கள் ஓய்வு கொடுத்துவிடலாம் என தயாரிப்பாளர் கூறினார். ஆனால், அஜித் அதை மறுத்துவிட்டு படப்பிடிப்புக்கு வந்தார். பைக் சேஸிங் காட்சி எனில் உடலில் 3 லேயர் உடைகளை அணிய வேண்டும் ஆனால், அடிபட்டு புண்ணாக இருக்கும் உடலில் அது போன்ற உடைகளை அணிவது கடினம். ஆனால், அஜித் அதை அணிந்து கொண்டு நடிக்க தயாரானார்.

நாமெல்லாம் உடலில் சிறு காயம் வந்தாலும் அதை வெளியே காட்டிக்கொள்வோம். ஆனால், இப்படி உடலில் எந்த பிரச்சனை வந்தாலும் அதை தாங்கிக் கொண்டு நடிப்பவர் அஜித்’ என வினோத் தெரிவித்தார்.