web analytics
Monday, August 8SOCIAL MEDIA

வலிமை வினோத்தோட கதையே இல்லையாம்!… இது என்னடா புதுக்கதை….

h vinoth

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான திரைப்படம் வலிமை. இப்படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார். இப்படம் சமீபத்தில் வெளியாகி அஜித் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. ஒருபக்கம் படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்களும் எழுந்தது. தேவையில்லாத செண்டிமெண்ட் காட்சிகள் ரசிகர்களை கவரவில்லை எனவும் பரவலாக கூறப்பட்டது.

இந்நிலையில், இந்த படத்தின் கதையே அஜித்துடையது எனக்கூறப்படுகிறது. அதாவது, இப்படத்தின் ஒன்லைன் கதையை அஜித் கூற வினோத் அதை டெவலப் செய்து திரைக்கதையாக மாற்றியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களுக்கு சிறப்பான கதையை வினோத் அமைத்து ரசிகர்கள் மற்றும் திரையுலகினரின் பாராட்டை பெற்றார். அஜித் அவரை அழைத்த போது தற்போது அடுத்து எடுக்கவுள்ள அஜித் 61 படக்கதையைத்தான் அஜித்திடம் வினோத் கூறியுள்ளார். ஆனால், இதை அப்புறம் செய்வோம். பாலிவுட் ஹிட் அடித்த பிங்க் படத்தை ரீமேக் செய்து கொடுங்கள் என அஜித் கேட்க, அப்படி உருவான திரைப்படம்தான் நேர்கொண்ட பார்வை. அதன்பின் வலிமை படத்தின் ஒன்லைன் கதையும் அஜித்துடையதே…

ஆனால், அடுத்து உருவாகவுள்ள அஜித் 61 படத்தின் கதை மற்றும் திரைக்கதை முழுக்க முழுக்க வினோத்துடையது என்பது குறிப்பிடத்தக்கது.

%d bloggers like this: