தமிழில் திமிரு திரைப்படம் மூலம் ஆக்ஷன் அவதாரம் எடுத்தவர் நடிகர் விஷால், சண்டக்கோழி திரைப்படம் அவரை ரசிகர்களிடம் மிகவும் பிரபலப்படுத்தியது. அதன்பின் பல வெற்றி படங்கள் என தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கியவர்.
மேலும், விஷால் பிலிம் பேக்டரி எனும் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். அவர் நடிக்கும் பெரும்பாலான படங்களை அவரே தயாரித்து வருகிறார். கடைசியாக ஆர்யாவும், அவரும் இணைந்து நடித்த ‘எனிமி’ திரைப்படம் தீபாவளிக்கு வெளியானது.
இந்நிலையில், ஜி.வி.பிரகாஷ் நடித்த கிளுகிளுப்பு படமான ‘திரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் புதிய படத்தில் விஷால் நடிக்கவுள்ளார். இப்படம் பேன் இண்டியா திரைப்படமாக உருவாகியுள்ளது. அதாவது தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என 4 மொழிகளில் உருவாகவுள்ளது.
மேலும், ஒருபக்கம் வாகை சூடும், துப்பறிவாளன் 2 ஆகிய படங்களின் வேலைகளையும் அவர் துவங்கியுள்ளார்.