shruthi

நடிகர் கமலஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன். 7ம் அறிவு படத்தில் நடிகையாக அறிமுகமானார். அதன்பின் தமிழ மற்றும் பல தெலுங்கு படங்களில் நடித்தார். இவர் பாடகியும் கூட. நடிப்பு, மாடல், இசை, பயணம், கலை ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர்.

இவர் லண்டனை சேர்ந்த இசைக்கலைஞர் மைக்கேல் கார்சல் என்பவரை காதலித்தார். அதன்பின் அவர்களுக்கு இடையே பிரேக்கப் ஆனது.தற்போது மும்பையில் தங்கியிருக்கும் ஸ்ருதிஹாசன் தற்போது அசாமை சேர்ந்த சாந்தனு ஹசாரிக்கா என்பவரோடு லிவ்விங் டூ கெதரில் இருக்கிறார். இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை அவ்வபோது இருவரும் பகிர்ந்து வருகின்றனர். விரைவில் இவர்கள் திருமணம் செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியானது.

shruthi

இந்நிலையில், இதுபற்றி கருத்து தெரிவித்த சாந்தனு ஹசாரிக்கா ‘நாங்கள் இருவரும் நல்ல நண்பர்களாக இருக்கிறோம். இப்போதுதான் டேட்டிங் செய்து வருகிறோம். நாங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்கிறோம். கலை, இசை, ஓவியம், ஆடைகளை வடிவமைத்தல் என ஆக்கப்பூர்வமான விஷயங்களில் ஈடுபட்டு வருகிறோம். படைப்பு பற்றி பேசுகிறோம். இதுதான் எங்களுக்குள் இருக்கும் உறவு. இது படைப்பாற்றல் தருணம். திருமணத்தை விட இதைத்தான் நான் பெரிதாக நினைக்கிறேன்’ என அவர் கூறியுள்ளார்.

ஏற்கனவே எனக்கு திருமணத்தில் நம்பிக்கை இல்லை என ஸ்ருதிஹாசன் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.