web analytics
Friday, May 20SOCIAL MEDIA

தனுஷ் ஐஸ்வர்யா பிரிவுக்கு யார் காரணம்?… கசியும் தகவல்..

danush

நடிகர் தனுஷுக்கும் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும் 18 வருடங்களுக்கு முன்பே திருமணம் நடந்தது. ஆனால், அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதாகவோ, பிரிய முடிவெடுத்திருப்பதாகவோ எந்த செய்தியும் இதுவரை வெளியாகாத நிலையில், இருவரும் பரஸ்பரம் பிரிவதாக அறிவித்துள்ளனர்.

பொதுவாக கணவன் மனைவி இருவரும் பிரிய முடிவெடுத்துள்ளனர் எனில் அவர்கள் இருவருக்கும் இனிமேல் இணைந்து வாழ முடியாது என்கிற எண்ணம் ஏற்படுவதே முக்கிய காரணம் என்றாலும், இந்த விஷயத்தில் தனுஷே காரணம் என பலரும் கூறுகிறார்கள்.

danush

பல வருடங்களாகவே தனுஷ் பற்றிய கிசுகிசுக்கள் ஐஸ்வர்யாவை கோபமடைய வைத்துள்ளது. இயக்குனர்கள் பலரும் தனுஷின் நடவடிக்கைகள் பற்றி ஐஸ்வர்யாவிடம் கூறியுள்ளதால் இது தொடர்பாக அவர்களுக்குள் பிரச்சனை இருந்து வந்துள்ளது. அதோடு, சுச்சி லீக்ஸ் எனும் பெயரில் வெளியான சில புகைப்படங்களும் ஐஸ்வர்யாவை கோபமடைய செய்துள்ளது.

குறிப்பாக சமீபத்தில் கணவரை பிரிந்த ஒரு நடிகையுடன் தனுஷ் நெருக்கமாக இருப்பதாக கிசுகிசு ஐஸ்வர்யா காதுக்கு போக, அந்த நடிகையிடமே ஐஸ்வர்யா போன் போட்டு விசாரிக்க, அந்த நடிகை இதை தனுஷிடம் கூற பிரச்சனை பெரிதானதாக கூறப்படுகிறது. இதற்கு முன்பும் சில வருடங்களுக்கு முன்பு இருவரும் பிரிய முடிவெடுத்தனர். அப்போது ரஜினி தலையிட்டு பேசி சமாதானம் செய்து வைத்தார். தற்போது அவரின் சமாதானம் தோல்வியில் முடிந்துள்ளதாக கூறப்படுகிறது.

%d bloggers like this: