will smith

இந்த ஆண்டிற்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா இன்று அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில், சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை உள்ளிட்ட விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

இண்டிபெண்டன்ஸ் டே, அலாவுதின் உள்ளிட்ட பல ஹாலிவுட் படங்களில் நடித்தவர் வில் ஸ்மித். இவர் கிங் ரிச்சர்ட் எனும் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை பெற்றுள்ளார். இது இவரின் முதல் ஆஸ்கர் விருது ஆகும்.

இந்நிலையில், ஹாலிவுட் காமெடி நடிகர் கிரிஸ் ராக் மேடையில் எல்லோரையும் சிரிக்க வைக்க பேசிக்கொண்டிருந்த போது வில்ஸ் ஸ்மித்தின் மனைவியின் மொட்டை தலை பற்றி கிண்டலடித்தார். ஒரு நோயால் அவரின் தலை முடி கொட்டிய நிலையில் அவர் இப்படி கிண்டலடித்தது வில் ஸ்மித்துக்கு பிடிக்கவில்லை.

எனவே, மேடையில் ஏறி அந்த நடிகருக்கு ஒரு அறை விட்டார். மேலும், தனது இருக்கையில் வந்து அமர்ந்து ‘என் மனைவியின் தலை முடி பற்றி பேசாதே’ என கத்தினார். இது சர்ச்சையாக மாறியுள்ளது. வில் ஸ்மித் வன்முறை செய்வது போல் நடந்து கொண்டார் என கருத்துக்கள் பரவி வருகிறது.