web analytics
Saturday, June 25SOCIAL MEDIA

தளபதி 66 படத்திலும் அந்த காமெடி நடிகர்..தெலுங்குலயும் கலக்கு மாமு!….

vijay

பீஸ்ட் படத்திற்கு பின் நடிகர் விஜய் ஒரு நேரடி தெலுங்கு படத்தில் நடிக்கவுள்ளார் என்பது எல்லோருக்கும் தெரிந்த செய்திதான். இப்படத்திற்கான படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் துவங்கவுள்ளது. இப்படத்தை தோழா படத்தை இயக்கிய தெலுங்கு பட இயக்குனர் வம்சி இயக்கவுள்ளார்.

vijay

இப்படத்தை தெலுங்கு பட தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கவுள்ளார். பல வருடங்களுக்கு பின் ஒரு மென்மையான காதல் கதையில் விஜய் நடிக்கவுள்ளாராம்.இப்படத்தில் விஜயின் அண்ணணாக சரத்குமார் நடிக்கவுள்ளாராம். இது விஜய் நடிக்கும் 66வது திரைப்படமாகும்.

yogi

இப்படத்தின் படப்பிடிப்புக்காக விஜய் ஹைதரபாத் சென்றுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் அங்கு துவங்கியது. இந்நிலையில், இப்படத்தில் யோகிபாபுவும் நடிக்கவுள்ளார்.இதற்காக இன்று அவர் ஹைதராபாத் சென்று படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

ஒரு நேரடி தெலுங்கு படத்தில் யோகிபாபு நடிப்பது இதுவே முதன் முறை ஆகும். ஆனால், தமிழிலும் இப்படம் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

%d bloggers like this: