Site icon CineCluster

குழந்தையுடன் விஜய்… தாறுமாறாக வைரலாகும் புகைப்படம்…..

vijay

தமிழ் சினிமாவில் ரஜினிக்கு பின் அதிக சம்பளம் பெறும் நடிகராக இருப்பவர் விஜய். இவருக்கான ரசிக கூட்டம் ஏராளம்.

இவரின் பட அறிவிப்பு, டைட்டில் லுக், டீசர், டிரெய்லர் என எது வெளிவந்தாலும் சரி அது பல மில்லியன் வியூஸ்களை பெறும். காதல் திரைப்படங்களில் நடிக்க துவங்கி பின்னார் மாஸ் ஹீரோவாக மாறியிருக்கிறார்.இவரின் திரைப்படங்கள் 100 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்து வருகிறது. விஜயின் சம்பளமும் ஏறக்குறைய அதுதான்.

மாஸ்டர் பட மெகா வெற்றிக்கு பின் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் அவர் நடித்து வருகிறார். இப்படத்தில் இடம் பெற்ற அரபிக்குத்து பாடல் வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில், விஜய் ஒரு குழந்தையை கையில் வைத்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இது பீஸ்ட் படப்பிடிப்பில் எடுக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

இந்த புகைப்படத்தை விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Exit mobile version